Photobucket

20 August, 2009

அதிகாரப் பகிர்வின்றேல் புலிகள் மீண்டும் அணிதிரளும் வாய்ப்பு ஏற்படும்-அமெரிக்கா எச்சரிக்கை


இலங்கையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படாவிடின், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படுமென்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபேட் பிளேக் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபேட் பிளேக் மேலும் கூறியதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அதிகாரங்கள் பகிரப்படா விட்டால், அது மீண்டும் தழிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதேவேளை, இலங்கை அரசாங்கம் ஆயிரக்கணக்கான மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றது.

இலங்கையில் அரசியல் இணக்கமொன்று காணப்படாமை குறித்து, மேற்குலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழர்களிடம் மாத்திரமல்லாது, இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும். அதிகாரங்கள் இலங்கையில் பகிரப்பாடாவிடின், தமிழ் மக்கள் விரக்தியடைவர். இதனால், புலிகள் மீண்டும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்

No comments:

Post a Comment