Photobucket

08 September, 2009

ஈழத் தமிழர்கள்-காங். எம்.பிக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம்.

டோரன்டோ: தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா? இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.

அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.

சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.

ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.

இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.

திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.

அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.

சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.

தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?

இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...

கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.

'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.

1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்

2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்

3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்

4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்

5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.

காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."

இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்? இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா? தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.

Tags: lanka tamils, sudarsana nachiappan, canada padaipaligal kazhagam, cong, condemn, இலங்கைத் தமிழர்கள், சுதர்சன நாச்சியப்பன், கனடா படைப்பாளிகள் கழகம், காங்கிரஸ், கண்டனம்.

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



ஈ-மெயிலில் வந்தது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி
தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி

புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்: ஐ.நா. உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு உத்தரவு

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர், கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து பணியாற்றி வந்தார். இவர் யுனிசெப்' செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடந்து வந்தபோது, போரில் குழந்தைகள் சிக்கி தவிப்பது குறித்து ஜேம்ஸ் எல்டர் அடிக்கடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் எல்டரை இலங்கையை விட்டு உடனே வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இலங்கையில் 2010 ம் ஆண்டுவரை வசிப்பதற்கான விசாவை ஜேம்ஸ் எல்டர் வைத்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், ஐ.நா. சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஜேம்ஸ் எல்டரின் விசா, வருகிற 21 ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக குடியேற்றப்பிரிவு அதிகாரி பி.பி.அபய்கூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டர், குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவினர் சார்பில் குரல் கொடுத்து வந்ததாக யுனிசெப்' பிராந்திய தகவல் தொடர்பு தலைவர் சாரா க்ரவ் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் எல்டரின் விசா நிலவரம் குறித்த கூடுதல் தகவல்களை யுனிசெப்' கேட்டுள்ளது.

மகிந்தவுடன் த.தே.கூ. 2 மணி நேரம் பேச்சு: மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்து


வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது.
மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார்.

இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களில் சென்று வசிப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மகிந்த, அது தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 5:00 மணியளில் தொடங்கிய பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று கலந்துகொண்டது.

பேச்சுவார்ததைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சிறிலங்கா அரச தலைவருடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. இதில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் முக்கியமாகக் குறிப்பிட்டோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் வேலைத்திட்டம் ஒன்றில் மீள்குடியேற்றுவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையில் அதில் 10 வீதமானவர்களைக் கூட அரசு மீள்குயேற்றவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனால் இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என நாம் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.

அவர்கள் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவேண்டிய தேவை இருப்பதாக நீண்ட ஒரு விளக்கத்தைத் தந்தார்கள். ஆனால், கண்ணிவெடிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களை முதலில் குடியேற்றக் கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

இதனைவிட வவுனியாவில் உள்ள முகாம்களில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். இங்குள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வசிப்பதற்கு விரும்பினால் அவர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதிப்பது அவசியம் எனவும் நாம் தெரிவித்தோம்" என சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, இவ்வாறான அறிவித்தல் ஒன்றை தாம் ஏற்கனவே வெளியிட்டிருப்பதாகவும் மேலும் அது தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி முகாமில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியா முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக மகிந்த வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபனமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள். இதனை மகிந்த ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இன்றைய சந்திப்பின்போது அது தொடர்பாக விரிவாக ஆராயப்படவில்லை. எதிர்வரும் சந்திப்புக்களில் இது தொடர்பாக ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

மகிந்தவுடனான இந்தப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பாக பசில் ராஜபக்ச தலைமையிலான அரச தலைவர் பணிக்குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது. இன்றைய பேச்சுக்கள் தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு திருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் மகிந்தவுடன் சுசில் பிரேம் ஜயந்த, ரிசாத் பதியுதீன், மகிந்தவின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு நலன்புரி முகாம்களுக்குப் பொறுப்பான படைத்தளபதி ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, சிவசக்தி ஆனந்தன், ஐ.எம்.இமாம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.