Photobucket

30 August, 2009

சீமானின் தூத்துக்குடி நிகழ்ச்சி....தேசிய,தமிழ்க் கட்சிகளுக்கான சரிவின் ...ஒரு புதிய தொடக்கம்

thuuththukkudi peerani 29.08.2009சனிக்கிழமை மாலை முதல் தூத்துக்குடி நகரம் முழுதும் களை கட்டி விட்டன...காமராஜர் கல்லூரியில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பால விநாயகர் தெருவில் உள்ள இடத்தில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது...

இந்த பேரணியின் அணைத்து புகைப்படங்களையும் பார்வையிட இங்கு சொடுக்கவும் நன்றி

thuuththukkudi peerani 29.08.2009

thuuththukkudi peerani 29.08.2009

பேரணி சுமார் நான்கு மணியளவில் தொடங்கி யானை முன்செல்ல ...அதில் கம்பீரமாக அமர்ந்து புலிக் கொடி ஏந்தி ...தாரை தப்பட்டை முழங்க ...இரு சக்கர ஊர்வலம் தொடர்ந்து வர... மேதகு தேசிய தலைவர் வே.பிரபாகரன் புகைப்படம் அணிந்த மேல்சட்டையும் பதாகைகளும் கொண்டு வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர்....ஊர்வலம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஊர்ந்து சென்றது...( சமீப காலங்களில் ஊர்வலம் இது போன்று நடைப் பெற்றது ...தலைக்கு இருநூறு ரூபாய் மற்றும் கோழிப் பிரியாணி, வாகன செலவு மற்றும் மறக்காமல் தண்ணீர் பாக்கெட் உள்பட ...என்றாலும் ஒரு ஒழுங்குக்கு ஒத்துவராத பேரணிகள் அவை ... ) பேரணி சுமார் தூத்துக்குடி நகரின் முக்கியத்துவமான நிகழ்ச்சியாக அமைந்தது...

thuuththukkudi peerani 29.08.2009
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியின் முன்னோட்டமாக தேனிசை செல்லப்பாவின் செவி இசை அனைவரும் கண்டு களிக்கும் நல்ல இசை நிகழ்ச்சியாக அமைந்தது...இந்த தூத்துக்குடி" நாம் தமிழர்" நிகழ்ச்சி முழுதும் நாம் தமிழர் அமைப்பின் வளர்ச்சிக்கான சிறந்த ஒரு முன் உதாரணமாக அமைந்தது என்று சொல்லலாம்....மதுரை நிகழ்ச்சிக்குப் பின் இந்த தூத்துக்குடி நிகழ்ச்சி மிகவும் கவனமாக திட்டமிட்டு நடந்த நிகழ்ச்சி என்று பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்...

thuuththukkudi peerani 29.08.2009

பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு இவையெல்லாம் தமிழ் நாட்டிலுள்ள தேசிய அல்லது தேசிய கட்சியாக மாறப் போவதாக கூறிக்கொள்ளும் கட்சிகளுக்கும்....அரிதாரம பூசி சமீபத்தில் தேசிய கட்சி ஒருவாக்கிய போலி தமிழ் தலைவனுக்கும்...இனிமேல் தேசிய கட்சியில் வர இருக்கும் தனது சினிமா அரசியலில் ( எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபனா....அது என்ன சினமா அரசியல்...தெரியாதவர்களுக்கு ...! .ஒரு சிறு விளக்கம் ...! நடிகர் விஜயகுமார் மஞ்சுளா அரசியல் அது )..
கலக்க மூட்டுபவையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல...!

thuuththukkudi peerani 29.08.2009

காசு கொடுத்து யாரும் வரவில்லை....என்றாலும் மிகப் பெரும் கூட்டம் ...யெல்லாம் இளைஞர்கள் ...அவர்களின் கண்களில் தெரிந்தது யெல்லாம் தமிழ் விடுதலை ...தமிழ் உணர்வு ....தமிழ் வேட்கை ...நீண்ட நாட்கள் ஆயிற்று ...இந்த புதிய தலைமுறை பார்த்து.... முன்பு இப்படித்தான் நடந்தது....அதை அறுவடை செய்தது ...இன்று உள்ள MNC கருணா... இனிமேல் யாரும் அறுவடை செய்ய முடியாது .....அப்படியே பொருத்திப் பார்ப்பதுதான் நடக்கப் போகின்றன....

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வே தேவை : லியாம் பொக்ஸிடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸிடம், இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரே இவ்வாறான கோரிக்கைகளை அவரிடம் விடுத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதுபற்றிய தகவல்களை யாழ். மக்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் மரணப்பொறிக்குள் விலங்கிட்ட விலங்குகளான தமிழினம்

ஆக்கிரமிப்பு யுத்தத்தில் சரணடைந்த அப்பாவி தமிழர்களை சிறிலங்கா அரச படைகள் விலங்கிட்ட் விலங்குகளைப்போல் ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் மிருகவெறித்தனமான கொலைப்படலம் அண்மையில் ஆதாரத்துடன் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டனை தளமாகக்கொண்டு இயங்கும் 'சனல் - 4' தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொலி மனிதநேயம்மிக்க எல்லா மக்களின் மனங்களையும் ஒரு கணம் உலுப்பியிருக்கிறது. ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தக்காட்சியை கணனியின் முன்னிருந்து கண்ணீருடன் பார்த்து எழும்பி தன்னுறவுகளை நினைத்து வெதும்புகிறான்.

தற்போதைய நிலையில் ஈழத்தமினத்திற்கு சர்வதேச சமூகம்தான் எல்லாமே என்றாகிவிட்டதால் - இவற்றின் பின்னணியில் - சில நியாயமான வினாக்களை முன்வைப்பது இங்கு சாலப்பொருந்தும்.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதி முதல் இந்த ஆண்டின் முற்பகுதிவரை இவ்வாறான சம்பவங்கள் தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்றன என்று புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் ஒப்பாரி வைத்தழுது தமது உறவுகளை காப்பாற்க்கோரி சர்வதேச சமூகத்திடம் மன்றாடி நின்றபோது, அது பற்றி செயல்ரீதியாக கிஞ்சித்தும் நடவடிக்கை எடுக்காது, தனியே அறிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துவந்த சர்வதேச சமூகம் இன்று இந்த ஆதாரபூர்வமான மனிதப்பேரவலத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

இந்த மனிதப்பேரவலம் தொடர்பாக விசாரணை செய்யலாமா என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் நீதிவான்களாக தம்மைக்காண்பித்துக்கொண்டு தமிழர்களை கொல்ல கொலைவாளை துடைத்துக்கொடுத்த பன்னாட்டு சமூகம், சிறிலங்கா அரசின் கொலைப்படலத்துக்கு முழுமையான அங்கீகாரம் கொடுத்துவிட்டு, தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இன்று என்ன பதில் வைத்திருக்கிறது?

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுதள்ளிய சிறிலங்கா அரச படைகளின் தளபதிகளையும் அந்நாட்டு அரச அதிபரையும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ரீதியில் சர்வதேச நீதிமன்றின் முன்நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதெல்லாம், அதற்கு ஆதாரம் உள்ளதா என்று வினா எழுப்பிய சர்வதேச சமூகம், தம்மிடம் சரணடைந்த பொதுமக்களை இவ்வாறு கொன்று தள்ளிய நாட்டு அரசினை எந்த வகையான 'ஜனநாயகத்திற்குள்' அடக்கப்போகிறது?

இவ்வாறு படுகொலைகளை புரிந்த படைகளின் தளபதிகள் பலருக்கு உயர்பதவிகள் அளித்தும் வெளிநாட்ட தூதவர்களாக பதவி உயர்வளித்தும் அவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்து வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசின் நடவடிக்கையை அங்கீகரித்து - தமிழ்மக்களை கொலைபுரிந்த இரத்தக்கறைபடிந்த கைகளுடன் தமது நாடுகளுக்கு வரும் சிறிலங்கா படை அதிகாரிகளை - வெளிநாடுகள் தமது நாட்டில் தூதவர்களாக அடைக்கலம் கொடுக்கப்போகின்றனவா?

தமிழ்மக்கள இவ்வாறு கொலைவாள் கொண்டு அரிந்து வதைபுரிந்த படைகளின் தளபதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கலாக 80 பேருடன் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருக்கு செல்லவுள்ள சிறிலங்கா அரச அதிபர் மகிந்த தலைமையிலான குழு, உள்நாட்டில் புரிந்த கொலைப்படலத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு ஆயத்தமாகிவருகிறதே. இதற்கும் ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடிய வண்ணம் இருக்கப்போகிறதா?

தம்மிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை இவ்வாறு கொன்றுதள்ளியுள்ள ஒரு அரசாங்கம், தனது ஆட்சியை எந்த வகையில் ஜனநாயகம் என்ற சொல்லுக்குள் அடக்கப்போகிறது? போரின்போது தம்மிடம் சரணடைந்த 7 சிங்கள படைவீரர்களை - தாங்கள் உயிர்விடும் தறுவாயில்கூட - சிறுகாயமுமின்றி தென்பகுதிக்கு அனுப்பிவைத்துவிட்டு மாவீரர்களானவர்கள்தான் விடுதலைப்புலிகள். போருடன் சம்பந்தப்பட்டவர்களை அந்த நியமங்களின் பிரகாரம் விடுதலைசெய்து தமது கொள்கைக்காக கடைசிவரை போரிட்டு மாண்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால், தம்மிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி படுகொலை செய்த படைகளையும் அதனை வழிநடத்திய அரசையம் என்ன சொற்பதத்தால் அழைப்பது?

இப்படி எத்தனை கேள்விகளைத்தான் அடுக்கிச்செல்வது?

இனச்சுத்திகரிப்பை தனது அரசின் இரகசிய கொள்கையாக வைத்துக்கொண்டு சர்வதேசத்தின் காதுகளில் பூச்சுற்றிய வண்ணம் காட்டு தர்பார் நடத்தி தமிழ்மக்களை சங்காரம் செய்யும் ஒரு அரசுக்கு சர்வ சக்தி பொருந்திய வல்லரசுகளாக தம்மை காண்பித்துக்கொள்ளும் நாடுகள் இன்னமும் காவடி தூக்கியவண்ணமிருந்தால், அது வரலாறு காணாத இன்னும் ஒரு போருக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் மேற்கொண்ட அனைத்துமே பயங்கரவாதம் என்று கூறிவந்த சர்வதேச சமூகம், இவ்வாறான கொலைப்படலத்தை அரங்கேற்றும் ஒரு அரசுக்கு எதிராக ஆயுத வழியின்றி எந்த மார்க்கத்தில் போரிடவேண்டும் என்று எதிர்பார்க்கிறது?

தமது மக்களுக்கு சிங்கள அரசினாலும் அதன் படைகளாலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பதனால், அந்த வன்முறைகளிலிருந்து தமது மக்களை காப்பாற்றுவதற்காகவே - இரத்தவெறி பிடித்த அரசுக்கு எதிராகவே - விடுதலைப்புலிகள் ஆயுதம் தரித்தார்கள். தமது மக்களைக்காப்பாற்றுவதற்காகவே போராடினார்கள் என்பதை இப்போதாவது சர்வதேசம் புரிந்து கொள்கிறதா?


தமிழ்மக்கள் ஆயுத ரீதியில் சிங்களப்படைகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்ளாவிட்டால் இதே மாதிரியான கொலைப்படலத்தைத்தான் அது நித்தமும் சந்திக்க நேரிடும். இதனை இவ்வளவு காலமும் புரிந்துகொள்ளாத சர்வதேசம் - ஒரு இனத்தின் பாதுகாப்புக்கும் அவர்களின் விடிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது தனது பூகோள அரசியல் இருப்பு என்ற பூதக்கண்ணாடியை வைத்து - தமிழர்களின் போராட்டத்தில் குற்றம் கண்டுபிடித்தது. சிறுபான்மையினம் ஒன்று தனது பாதுகாப்பிற்காக நடத்திய போராட்டத்தில் குறை கண்டுபிடித்தது.


இன்று சிறிலங்கா அரசுக்கு ஆதரவும் அனுசரணையும் ஆலோசனையும் ஆசீர்வாதமும் கொடுத்ததன் மூலம் சர்வதேசம் தனது கைகளிலும் படிந்த இரத்தக்கறையை அழிக்கமுடியாமல் நின்று திண்டாடுகிறது.

தமிழ்மக்களின் பேரம்பேசும் சக்தியாக - வலுவான இராணுவமாக - அரசியல் தளமாக - இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை உலகமே திரண்டுநின்று அழித்துஒழித்துவிட்டது.

தற்போது அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டிய பொறுப்பு சர்வதேசத்திடமே உள்ளது.

தமிழ்மக்களின் விடிவுக்கு சர்வதேசம்தான் உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

அவர்கள்தான் அதனை பெற்றுக்கொடுக்கவேண்டும்.


இன்னமும் தமிழினம் சர்வதேசத்தை நம்பி அதன் தீர்வை எதிர்பார்த்து ஏங்கிநிற்கிறது.



விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!


தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் "பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.

"புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், "விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.

தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்' வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது

சுவிஸ் வங்கியில் மூன்று பில்லியன் டொலர் நிதி வைப்பு பத்மநாதன் தெரிவித்துள்ளதாக:சிங்கள பத்திரிகை

Pathmanathanதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.