Photobucket

08 September, 2009

புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்: ஐ.நா. உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு உத்தரவு

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர், கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து பணியாற்றி வந்தார். இவர் யுனிசெப்' செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடந்து வந்தபோது, போரில் குழந்தைகள் சிக்கி தவிப்பது குறித்து ஜேம்ஸ் எல்டர் அடிக்கடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் எல்டரை இலங்கையை விட்டு உடனே வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இலங்கையில் 2010 ம் ஆண்டுவரை வசிப்பதற்கான விசாவை ஜேம்ஸ் எல்டர் வைத்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், ஐ.நா. சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஜேம்ஸ் எல்டரின் விசா, வருகிற 21 ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக குடியேற்றப்பிரிவு அதிகாரி பி.பி.அபய்கூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டர், குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவினர் சார்பில் குரல் கொடுத்து வந்ததாக யுனிசெப்' பிராந்திய தகவல் தொடர்பு தலைவர் சாரா க்ரவ் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் எல்டரின் விசா நிலவரம் குறித்த கூடுதல் தகவல்களை யுனிசெப்' கேட்டுள்ளது.

No comments:

Post a Comment