சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் பல மாத காலமாக விசாரணைகள் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி நாளை சனிக்கிழமை தொடக்கம் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வெலிக்கடைச் சிறைச்சாலை, மகசீன் சிறை, மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் உட்பட சுமார் 2 ஆயிரம் தடுப்புக்காவல் கைதிகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் எனவும், பூசா தடுப்பு முகாமில் உள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் இதில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிகின்றது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் கைது செய்யப்பட்ட பெரும் தொகையான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது குற்றப் பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. சுமார் 50 வரையிலானவர்களே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக உள்ளனர். விசாரணைகள் இன்றித் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் அதிகமாக சிறைவாசம் இருக்கின்ற போதிலும் அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தென்பகுதிச் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் தமக்கு பொது மன்னிப்பு வழங்கி, தம்மை விடுதலை செய்யுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கும் கடிதங்களை அனுப்பிவைந்திருந்த போதிலும் அது தொடர்பாக உரிய பதில் கிடைக்காததையடுத்தே உண்ணாநிலைப் போராட்டத்தை அடுத்தகட்டமாக தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
21 August, 2009
சிறிலங்கா சிறைகளில் வாடும் தடுப்புக்காவல் கைதிகள் நாளை முதல் உண்ணாநிலைப் போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment