
அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிராக 600 பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாட்டில் பயங்கரவாதி ஒருவருக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் தொடர்பில் குமரன் பத்மநாதன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment