Photobucket

19 August, 2009

அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி


முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அவலத்தைத வேடிக்கை பார்த்த சர்வதேச சமுகம் இன்னும் சில தினங்களில் வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறப்போகும் ஆயிரக்கணக்கான மரணங்களையும் வேடிக்கை பார்க்கப் போகின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பா. உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியா அகதி முகாம்களில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ஐ.நா.வே காரணமென அரசு குற்றஞ்சாட்டுகின்றது. அப்படியானால் இந்த அரசு ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றியது.அல்லது ஐ.நா.வைக் கேட்டுவிட்டா வவுனியா முகாம்களில் அடைத்து வைத்தது. அல்லது ஐ.நா.விடம் அந்த முகாம்களின் பொறுப்பை ஒப்படைத்ததா? என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இனிவரப்போகும் பருவப்பெயர்ச்சி மழையின் அனர்த்தத்திலிருந்து முகாம்களிலுள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகளில் அந்த மக்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது:

ஆகஸ்ட் 14 ல் பெய்த கடும் மழையினால் பல கூடாரங்களும், மலசல கூடங்களும் மூழ்கிவிட்டதுடன், அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

300 க்கும் அதிகமான குடும்பங்கள் ஒன்றுகூடி வலயத்தின் பிரதான வாயிலை நோக்கி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் வன்முறைகளற்ற விதத்தில் தமது துன்பத்தை வெளிப்படுத்தியதாகவும் தமது எதிர்ப்பை சத்தமிட்டு வெளிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடும். முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாமல் பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலைமைக்கு அது இட்டுச் செல்லும் என்றும் அந்த அறிக்கைக் குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முட்கம்பி வேலியால் சூழப்பட்டுள்ள முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது விருப்பத்திற்கு மாறாக குற்றவாளிகள் போன்று அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment